‘கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல’ ஹாபீஸ் நஸீர் அஹ்மத்..

0
175

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்? என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத் கேள்வியெழுப்பியுள்ளார் .

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்றம் 

இதன்போது கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த கூட்டத்தில் கல்லந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் ஹாபீஸ் நஸீர் காரசாரமாகக் கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்தார். மேலுன் தான் முதலமைச்சராக இருந்ததாகவும், எனினும் இப்படி செயற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.