மன்னர் சார்லஸ் மீது மரபுகள் மற்றும் அரச நெறிமுறை மீறி கை வைத்த ஜோ பைடன்

0
189

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரச மரபுகள் மற்றும் நெறிமுறையை மீறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்தார். இதில் சார்லஸை அவர் சந்தித்த போது நடந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பைடனின் கார் வின்ட்சர் கோட்டைக்கு வந்ததும், மன்னர் சார்லஸ் அவரை கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் அவர் மன்னர் சார்லசை முதுகில் தொட்டுள்ளார்.இது அரச நெறிமுறையை மீறிய செயல் என ஊகங்கள் எழுந்தது.

அதே நேரம் ஜோ பைடன் தன் முதுகைத் தொட்டதை மன்னர் சார்லஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மன்னர் சார்லஸின் முதுகில் பைடன் தொட்டதால் அவர் “முற்றிலும் செளகரியமாகவே உணர்ந்ததாக” அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.