ஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா..

0
214

ஜப்பானிலிருந்து சீனாவுக்கு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு நீரை கடலில் கலக்க அந்த நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதைத் தொடா்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா | China Bans Japanese Food Tamil

கதிா்வீச்சு நீக்கம்

அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீா், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிா்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் சீன அரசு இந்து முடிவுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவா்கள் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் உணவுகளுக்கு தடை விதித்த சீனா | China Bans Japanese Food Tamil