இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு!

0
156

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று ஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும் இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாசா மூத்த விஞ்ஞானியான இலங்கைப் பிரஜையான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழுவே ஆய்வுக்காக இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு; எதற்காக தெரியுமா? | Nasa Scientists Who Have Come To Sri Lanka

செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பு

நாசாவிலிருந்து இலங்கை வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

“இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

“இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு சிங்களத்தில் இந்த இரண்டு வகையான பாறைகளுக்கும் சரியான பெயர்கள் சூட்டப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.