அறியாத நபரை வீட்டில் தங்கவிட்ட பெண்; காத்திருந்த அதிர்ச்சி!

0
209

கொழும்பில் அனுதாபத்தால் நபர் ஒருவரை வீட்டில் தங்கவிட்டதால் பெண் ஒருவர்  ஒருகோடிக்கும் அதிகமாக இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்ணின்  கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனா். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டில் தங்கவைத்த பெண்

கொள்ளையிட்ட  சந்தேக நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைபேசி கடைக்கு சென்றிருந்த சந்தேக நபர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.​​ அதோடு , தான் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக கூறியதுடன் சந்தேக நபர் தனக்கு பெற்றோர், சகோதர, சகோதரிகள் இல்லை என்றும், ஏதாவது வேலையும் தருமாறும் கெஞ்சியுள்ளார்.

 அவரது கதையைகேட்டு  இரங்கிய பெண் தனது கடையில் சந்தேகநபரை வேலைக்கு  அமர்த்தியுள்ளார்.  பின்னர் சந்தேக நபரை வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டிலேயே  தங்க வைக்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.

 சம்பவத்தன்று, பெண் தனது இளைய மகளை சந்தேக நபருடன் விற்பனை நிலையத்திற்கு அனுப்பிவிட்டு புறக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அதன்படி நேற்று (27) காலை 9 மணியளவில் மகளும், சந்தேகநபரும் விற்பனை நிலையத்தை திறந்துள்ளனர். பின்னா் மகள் உணவருந்துவதற்காக வௌியில் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

பெரும்தொகை பணத்துடன் மாயம்

அந்த நேரத்தில் பெண் தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்துள்ள நிலையில், மகள் பதிலளிக்காததால் சந்தேக நபரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்ததாகவும் , எனினும்  அதற்கும் எந்த பதிலும் வராததால், அருகில் உள்ள விற்பனை நிலையத்திற்கு   அழைப்பெடுத்து  மகளிடம் கொடுக்குமாறு கோாியுள்ளாா்.

விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணின் விற்பனை நிலையத்திற்கு சென்று தேடியபோது, ​​அங்கு யாரும் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், , சந்தேகமடைந்த   பெண்   விரைந்து சென்றுள்ளார்.   அங்கு சென்ற போது ​​மகள் மட்டும் இருந்ததை அவதானித்துள்ளார்.

சந்தேகநபரை காணாததால் ,  கடையை சோதனையிட்ட போது, ​​கடையின் ஒரு அறையில் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாாிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையிட்ட  பணங்களின் மொத்த பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் என்று அந்த பெண் கூறியுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.