பிரதமரின் பெயர் தெரியாத மணமகன்; இது கூட தெரியாதா… திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார்!

0
203

இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மணமகனுக்கு தெரியாததால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம் சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27) பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பிரதமரின் பெயர் தெரியாது முழித்த மணமகன்; இதுகூட தெரியாதா.... திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார்! | Modi Name Is Unknown Bride S Stopped Marriage

திருமண சடங்குகள்

திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார். பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார்.

பிரதமரின் பெயர் தெரியாது முழித்த மணமகன்; இதுகூட தெரியாதா.... திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார்! | Modi Name Is Unknown Bride S Stopped Marriage

பிரதமர் மோடியின் பிரபலமாக இருக்கும் நிலையில் அவரது பெயர்கூட மணமகனுக்கு தெரியவில்லையே என்று மணமகள் குடும்பத்தினர் குழப்பம் அடைந்தனர்.

இந்த தகவல் மணமகள் ரஞ்சனாவின் காதுக்கும் எட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பிரதமரின் பெயர்கூட தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

பிரதமரின் பெயர் தெரியாது முழித்த மணமகன்; இதுகூட தெரியாதா.... திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார்! | Modi Name Is Unknown Bride S Stopped Marriage

மாப்பிள்ளையின் தம்பியுடன் திருமணம்

அதன்பிறகு கிராமத்து தலைவர்கள் முன்னிலையில் இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி மணமகனின் தம்பி ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும் ஆனந்தின் படிப்பறிவை சோதிக்க விரும்பிய மணமகள் வீட்டார் அவரிடம் சில பொது அறிவு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் தெளிவான பதில்களை அளித்தார்.

பிரதமரின் பெயர் தெரியாது முழித்த மணமகன்; இதுகூட தெரியாதா.... திருமணத்தை நிறுத்திய மணமகள் வீட்டார்! | Modi Name Is Unknown Bride S Stopped Marriage

தொடர்ந்து ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் மணமகனின் தந்தை ராம் அவதார், ‘‘துப்பாக்கியால் மிரட்டி எனது இளைய மகன் ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

எனது மகன் ஆனந்த் திருமண வயதை எட்டவில்லை. அதற்கு முன்பே அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவிட்டனர்’’ என்று  பொலிஸி புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் “இது விநோதமான வழக்கு. இதுதொடர்பாக இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும்’’ என பொலிஸார் தெரிவித்தனர்.