மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த நீதிமன்றம்; அதிர்ச்சியில் கணவர்!

0
159

திருமணமான பெண்ணை காதலனுடனேயே வாழ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதனால் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 2012 இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்த நீதிமன்றம்; அதிர்ச்சியில் கணவர்! | Court Sends Wife Away Boyfriend Shocked Husband

நீதிமன்றத்தை நாடிய கணவர்

மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது. ஜிம் பயிற்சியாளரின் மனைவி பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக ஊடகங்களில் பழகி வந்த நிலையில், அந்த பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது.

இதனையடுத்து அந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு ஆகஸ்ட் 7, 2022 வீட்டிவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளாமல்  நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்த நீதிமன்றம்; அதிர்ச்சியில் கணவர்! | Court Sends Wife Away Boyfriend Shocked Husband

மனைவி பிரிது சென்று மற்றொருவருடன் வாழ்ந்த நிலையில் ஜிம் பயிற்சியாளர் மாநில ஐகோர்ட்டை நாடினார். தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும், தனது மனைவி சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

இதனையடுத்து நீதிபதிகள் மனைவியை மே 4 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் சூப்பிரெண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

அந்த பெண் பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும். தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், இனி அவருடன் வாழ விரும்பவில்லை எனவும் மனைவி கூறினார்.

மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்த நீதிமன்றம்; அதிர்ச்சியில் கணவர்! | Court Sends Wife Away Boyfriend Shocked Husband

இதை தொடர்ந்து நீதிபதிகள் , இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அந்த பெண்ணின் விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

அந்தப் பெண் எப்படி இருந்தாரோ அப்படியே வாழ நீதிமன்றம் அனுமதித்தது. இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கியுள்ளாராம்.