தென்னிந்திய உணவுகளை பாராட்டிய அமெரிக்க தூதர்

0
179

தென் இந்திய உணவை ருசித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் “என்னை கவர்ந்த சென்னை” தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முதல் அரேபிய நாடுகள் வரை இந்திய உணவகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல அமெரிக்க, சீன, அரேபிய மற்றும் ஜப்பானிய உணவுகங்கள் இந்தியாவிலும் செயல்பட்டு வருகின்றன.

 உணவுக் கலாச்சாரம்

உலகின் பல பகுதிகள் தங்கள் வாழ்வியலுக்கு உகந்த உணவுக் கலாச்சாரத்தை கொண்டுள்ளனர். இந்திய உணவான பிரியாணியை வெளிநாட்டினர் விரும்பி உண்பது போல சீன உணவான நூடுல்ஸ் மற்றும் பீட்சாவை இந்தியர்களும் விரும்பி உண்டு வருகின்றனர்.

உணவு பழக்க வழக்கத்தைத் தாண்டி ஆரோக்கியத்திலும் முக்கிய இடத்தை வகிப்பதால் மக்கள் எங்கெல்லாம் இடம்பெயர்கிறார்களோ அங்கேல்லாம் தங்களது உணவுக் கலாச்சாரத்தை பரப்புகின்றனர்.

தென்னிந்திய உணவை புகழும் அமெரிக்க தூதர்.! | American Ambassador Praises South Indian Food

இந்த நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். அவருக்கு தென் இந்திய தாலி உணவு வாழை இலையில் பரிமாறப்பட்டது.

இது குறித்து அமெரிக்கத் தூதர் எரிக் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“வணக்கம் தென் இந்தியாவின் தாலி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன். தென் இந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. என்னை சென்னை மிகவும் ஈர்த்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/USAmbIndia/status/1668936090076553217?s=20