அணு ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா: பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்பு

0
222

அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் வைப்பதற்கான கட்டமைப்புக்கள் எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் நிறைவடையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் Vladimir Putin கூறியுள்ளமை பாபா வங்காவின் Baba Vanga கணிப்பு உண்மையாக நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் ஓராண்டுகளை கடந்து தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உக்ரைனின் அயல் நாடான பெலாரஸ் ஜனாதிபதியுடன் ரஷ்யா அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்திய போது அங்கு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் நிறைவடைந்த பின்னர் அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை குவிக்கும் நாடு: பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு | Russia Amassing Nuclear Weapon Baba Vanga

இதையடுத்து, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் ஜூலை மாத ஆரம்பத்தில் நிறைவடைந்த பின்னர் ரஷ்ய அணு ஆயுதங்கள் அந்த நாட்டிற்கு வழங்கப்படும் புடின் அறிவித்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் ஆதரவு நாடுகளும் அதிர்ச்சிடைந்துள்ள நிலையில் புடினின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டில் மிகப் பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை நடத்தும் என்றும் அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அணு ஆயுதங்களை குவிக்கும் நாடு: பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு | Russia Amassing Nuclear Weapon Baba Vanga

மேலும், இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி பேரலைகள், ராணி 2 ஆம் எலிசபெத்தின் மரணம் மற்றும் உலகையே ஆட்டி படைத்த கொரோனா என அனைத்தும் பலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறாக பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் நடந்துள்ளதால் அணு ஆயுத விடயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.