சிறுமி முதல் வயது வந்த பெண்கள் வரை விட்டுவைக்காத சீரியல் கிஸ்ஸர்; நீதிமன்றம் விசித்திரமான தண்டனை

0
166

ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது ‛சீரியல் கிஸ்ஸர்’ இற்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் விசித்திரமான தண்டனை ஒன்றை வழங்கி உள்ளது.

ஸ்காட்லாந்தில் பொதுவெளியில் பெண்களை குறிவைத்து முத்தமிட்டு குறித்த நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த ‛சீரியல் கிஸ்ஸர்’ தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்காட்லாந்தின் தலைநகராக எடின்பர்க் உள்ளது. இங்கு வசித்து வருபவர் மிர்சா முகமது சயீத் (வயது 64). இவர் திருமணம் முடிந்தவர்.

சிறுமி முதல் வயது வந்த பெண்கள் வரை விட்டுவைக்காத ‛சீரியல் கிஸ்சர்’; நீதிமன்றம் விசித்திரமான தண்டனை | A Serial Kisser From Girls Strange Punishment

  கிஸ் அடிக்கும் முதியவர்

இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். மிர்சா முகமது சயீத்துக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால் பொதுவெளியில் பெண்களை ஏமாற்றி முத்தமிடுவது தான். இதற்காக தினமும் மிர்சா முகமது சயீத் தனது செல்போனுடன் அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செல்வார். அப்போது அவர் அங்கு தனியாக வரும் பெண்களிடம் தனது செல்போனை கொடுத்து போட்டோ எடுத்து தரும்படி உதவி கேட்பார்.

அந்த பெண்களும் அவருக்கு போட்டோ எடுத்து கொடுப்பார்கள். பெண்களிடம் தனது செல்போனை திரும்ப பெறும் மிர்சா முகமது சயீத் அவர்களின் உதட்டில் முத்தமிட்டு ஓடிவிடுவார்.

இவ்வாறு அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் 16 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். 2021ல் பெண் ஒருவருக்கு முத்தமிட முயன்றபோது மிர்சா முகமது சயீத்தை அவர் சரமாரியாக தாக்கி பொலிசில் சிக்க வைத்தார்.

மேலும் மிர்சா முகமது சயீத் மீது ஏராளமான புகார்கள் போலீசுக்கு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு எடின்பர்க் ஷெரீப் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்குக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததனால் நீண்டகாலமாக வழக்கு நடந்து வந்தது. இதற்கிடையே தான் மிர்சா முகமது சயீத் 16 வயது சிறுமி உள்பட 8 பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக ஒப்புக் கொண்டார்.

விசித்திரமான தண்டனை

சிறுமி முதல் வயது வந்த பெண்கள் வரை விட்டுவைக்காத ‛சீரியல் கிஸ்சர்’; நீதிமன்றம் விசித்திரமான தண்டனை | A Serial Kisser From Girls Strange Punishment

இருப்பினும் வேறு 6 பெண்கள் கூறிய குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொள்ளாத நிலையில் சாட்சி ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. மிர்சா முகமது சயீத் குற்றங்களுக்காக அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க அவர் முடிவு செய்தார். தனது தவறை உணர்ந்த அவர் பொதுவெளியில் நடமாடாமல் வீட்டு காவலில் இருப்பதாகவும் சமூக பணியில் ஈடுபடுவதாகவும் சம்பளம் இன்றி வேலை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் மின்னணு சாதனங்கள் மூலம் தன்னை கவனிக்கும்படியும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அதன்படி மிர்சா முகமது சயீத் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை 189 நாட்களுக்கு வீட்டு காவலில் இருக்க வேண்டும். அவரது செயல்பாட்டை மின்னணு சாதனம் உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.

அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளுக்கு சமூக பணியிலும் ஈடுபடுவார். இதனையும் ஒருவர் மேற்பார்வை செய்ய வேண்டும். பின்னர் 252 மணிநேரம் வேலையிலும் ஈடுபட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ‛சீரியல் கிஸ்ஸர்’ மிர்சா முகமது சயீத் சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.