கனடாவில் இசை நிகழ்ச்சியில் நிராகரிக்கப்பட்டு இந்தியாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி பெண்!

0
239

கனடாவின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் இன்று இந்தியாவில் இசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் டில்லியில் பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜோனிட்டா காந்தி (33). அவர் ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. கனடாவில்தான் கல்வி கற்றார், வளர்ந்தார் ஜோனிட்டா.

முறைப்படி ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசை கற்ற ஜோனிட்டா, 16 வயதில் கனடாவில் பிரபல இசை நிகழ்ச்சியான Canadian Idol என்னும் நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் பங்கேற்றார்.

ஆனால், நீங்கள் எந்த வகை இசைக்கலைஞர் என்பதை கண்டுபிடித்தபின் மீண்டும் ஆடிஷனுக்கு வாருங்கள் என்று கூறி அவரை நிராகரித்துவிட்டார் நடுவர் ஒருவர். 

https://twitter.com/manchididengey/status/1665224224863076352?s=20

அன்று நிராகரிக்கப்பட்டதால் சோர்ந்துபோகவில்லை ஜோனிட்டா. இன்று அவரது குரலுக்கு உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள்.

ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார் ஜோனிட்டா. 

கனடாவில் இசை நிகழ்ச்சியில் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் இன்றைய நிலை | India Origin Jonita Gandhi Rejected Concert Canada

அவரது பாடல்களில் செல்லம்மா செல்லம்மா, இறைவா, ஜிமிக்கி பொண்ணு, மறந்தாயே போன்ற பாடல்களை முணுமுணுக்காதவர்கள் குறைவு என்றே கூறலாம்

https://twitter.com/manchididengey/status/1665224224863076352?s=20