கிழக்கில் கஞ்சா பயிர் செய்கை; ஆளுநர் அதிரடி!

0
193

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட காணிகளில் கஞ்சா பயிரிடப்படுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அமைப்புகளின் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை மட்டும் தண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை எனவும் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பான அரச நிறுவனங்களை பெயரிட அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் அரச காணிகளில் கஞ்சா பயிரிடப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த புகார்களை நான் பரிசீலிப்பேன். அதன்பின் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கிழக்கில் கஞ்சா பயிர் செய்கை; ஆளுநர் அதிரடி! | Cannabis Cultivation In The East Governor Action

கிழக்கு ஆளுநராக தாம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தம்மை தெரிவு செய்ததாக தெரிவித்தார்.

“எனக்கு தெரியாது. எதற்காக என்னை நியமித்தார்கள் என ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது முன்னோடியான அனுராதா யஹம்பத் தொடங்கிய பல்வேறு சீனத் திட்டங்களைத் தொடர்வீர்களா என கேட்டதற்கு அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மாத்திரமே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வெளியுறவுக் கொள்கையை அமைச்சு முடிவு செய்கிறது. அதன் உத்தரவுப்படி மட்டுமே செயல்படுவேன்” என கிழக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.