உலகின் இரண்டாவது ஆழமான கடல் அகழி மெக்சிகோவில் கண்டுபிடிப்பு!

0
332

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

900 அடி ஆழமுள்ள அந்த ராட்சத பள்ளம் ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் அந்த ராட்சத பள்ளம் அடர் நீல நிறத்தில் உள்ளது.

தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பேக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும் அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இந்த ராட்சத பள்ளங்களில் ஆக்சிஜன் குறைவு என்று கூறப்படுகின்றது.

எனவே சுற்றுலா பயணிகள் வழிதவறி நீந்திச்சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதைவிட பெரிய ராட்சத பள்ளம் ஒன்று இதற்கு முன் தென் சீன கடல் பகுதியில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.