நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி!

0
205

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதோடு கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகள்

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி! | Warning To Countrymen 15 People Died

அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவை நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

அதேவேளை  வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று சுகாதார சுகாதார மேம்பாட்டுப் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி! | Warning To Countrymen 15 People Died

மேலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் 

இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி! | Warning To Countrymen 15 People Died

மேலும் இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.