தேசிய பாதுகாப்பு சபைக்கு அதிரடி பணிப்புரை விடுத்த ஜனாதிபதி!

0
276

இலங்கையில் சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை மேற்கொள்வதற்கான சமூக பாதுகாப்பு சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சமூக பாதுகாப்பு சட்டத்தை பொது பாதுகாப்பு அமைச்சகம் (ஆன்லைன் பாதுகாப்பு சட்டம்) முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இருந்த இந்த சட்டமூலத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தேசிய பாதுகாப்பு சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த மசோதா சிங்கப்பூர் அரசின் நிபுணர்களின் உதவியுடன் நீதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் தயாரிக்கப்பட்டது.

முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabary) தலைமையில் இந்த சட்டமூலம் கொண்டுவர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவருக்குப் பின்னர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் (Wijeyadasa Rajapakshe) ஆலோசனையின் பேரில் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய பாதுகாப்பு சபைக்கு அதிரடி பணிப்புரை விடுத்த ஜனாதிபதி! எச்சரிக்கை தகவல் | Law Against False Information Social Media

இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.