ரஷ்யாவிற்கு ஏற்பட்ட படுதோல்வி! உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு பொதுசபை எதிர்ப்பு

0
216

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கி ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்கள்

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது.

இதில் முக்கியமான 3 அமைப்புகளில் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது.  பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் இடம் பெறுவதற்கான தேர்தலில் ருமேனியாவிடம் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது. 

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட படுதோல்வி! உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு வலுவாகும் எதிர்ப்பு | Russia Loses Election To Three Un Bodies Ukraine

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு

அதேபோல் ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் தேர்தலில் ரஷ்யா எஸ்டோனியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான இரகசிய வாக்கெடுப்பில் ஆர்மீனியா மற்றும் செக் குடியரசு நாடுகளிடம் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது.

ரஷ்யாவின் இந்த தோல்வி உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்ட் தெரிவித்துள்ளார்.