குழந்தைகள் வேண்டாம் எனில் கவுண்டரில் வைத்துவிடுங்கள்!

0
215

நாட்டில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குழந்தை பராமரிப்பு நிலையங்கள்

சில காரணங்களால் அவர்கள் விரும்பாத அல்லது தத்தெடுக்க முடியாத மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் தனது குழந்தையினை குறிப்பிட்ட சாளரங்களில்/ கவுண்டரில் வைத்து விட்டு செல்ல முடியும் என்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் வேண்டாம் எனில் கவுண்டரில் வைத்துவிடுங்கள்! | If You Don T Want Kids Leave It On The Counter

அதற்காக அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மாகாண நன்னடத்தை திணைக்களங்களின் மேற்பார்வையில் 379 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் சாளரங்களை நிறுவவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்த இடத்திலும் கைவிடப்பட்ட அல்லது திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் தேவையான பராமரிப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரங்களை வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.

கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் எனவும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.