பிரிட்டனில் 86 வயது முதியவர் படைத்த உலக சாதனை!

0
97

பிரித்தானியாவில் 75 கிலோகிராம் எடை தூக்கி தேசிய அளவிலும் உலக அளவிலும் சாதனை படைத்த 86 வயது நபர்.

பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய Brian Winslow வயது 86 ஆகும். 75 கிலோகிராம் எடையைத் தூக்கிய அவர் அதனையடுத்து 77.5 கிலோ எடை தூக்கி 2 சாதனைகளை ஒரே நாளில் சாதித்துக் காட்டினார்.

பிரித்தானியாவில் 86 வயது நபர் படைத்த உலக சாதனை! | World Record Set By 86 Year Old Man In Britain

பிரையன் இங்கிலாந்தின் டெர்பிஷையர் (Derbyshire) வட்டாரத்தைச் சேர்ந்தவராகும். அவர் பிரிட்டனில் நடைபெற்ற எடைதூக்கும் போட்டியில் இம்மாதம் (மார்ச் 2023) 18 ஆம் திகதி கலந்து கொண்டார்.

எடைக்கும் வயதுக்கும் அப்பாற்பட்டு அவர் எடைதூக்கியது பிரித்தானியாவில் பெரும் சாதனையாகக் பேசப்பட்டு வருகிறது. எடைதூக்கும் போட்டியில் சாதனை படைத்ததில் பெருமகிழ்ச்சி. நான் பங்கெடுத்த போட்டிகளில் இதுவே மிகச் சிறந்தது என்பேன்.

எடை தூக்குவது என் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். என்னால் முடிந்தவரை தொடர்ந்து எடைதூக்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.