அளவுக்கு அதிகமாக வோட்கா குடித்து கால்களை இழந்த கனடிய பெண்

0
87

கனடாவில் ஓட்கா அதிகம் அருந்திய பெண் ஒருவரின் கால்கள் அழுகிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மது குடிப்பது என்பது ஆணகள் பெண்கள் என இரு பாலாருக்கும் ஃபேக்ஷனாக மாறிவிட்டது.

ஆனால் மதுவுக்கு அதிகம் அடிமையாகாது நம்மை பாதுகாப்பதிலும் கவனம் இருக்க வேண்டும். 36 வயதான அந்த பெண் டொராண்டோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தனது நண்பர்களுடன் இரவு ஓட்கா குடித்துள்ளார்.

காலையில் காத்திருந்த அதிர்ச்சி

பின்னர் மோசமான ஒரு பொசிஷனில் தூங்கியுள்ளார். ஆனால் மறுநாள் காலை அவர் எழுந்த போது அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அவரது கால்கள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பெரிதாக வீங்கி இருந்தது.

ஓட்கா அதிகம் அருந்தியதால் கால்களை இழந்த கனேடிய பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Canadian Woman Loses Her Legs Drinking Vodka

அவரால் வழக்கம் போல நடக்கக் கூட முடியவில்லை. இதனால் அச்சமடைந்த அவர் ஆம்புலன்சுக்கு கால் செய்துள்ளார். அங்கே வந்த சுகாதார பணியாளர்களுக்கும் இது ஏன் என்று புரியவில்லை. பாதிகப்பட்ட பெண்ணை அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அவருக்கு பல எக்ஸ்ரே மற்றும் சோதனைகளை எடுத்துள்ளனர்.

அப்போது தான் அவருக்கு கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இரவு முழுக்க கால்களில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொசிஷனில் வைத்துத் தூங்கினால் இந்த கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதனால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் போகவே தசை மற்றும் நரம்பு செல்கள் சீக்கிரம் உயிரிழக்கத் தொடங்குகிறது.

ஓட்கா அதிகம் அருந்தியதால் கால்களை இழந்த கனேடிய பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Canadian Woman Loses Her Legs Drinking Vodka

அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணுக்குக் கால் அழுக ஆரம்பித்துள்ளது. அந்த பெண்ணின் உயிரைக் காக்க அறுவை சிகிச்சை கூடச் செய்ய வேண்டியிருந்தது. அவரது இடது காலில் ஆப்ரேஷன் செய்து இறந்த நிலையில் அழுகிக் கொண்டிருந்த தசைகளை வெளியே எடுத்து வீக்கத்தைக் குறைக்க வேண்டி இருந்தது.

மூன்று ஆண்டுகள் கடந்தும் வேதனை

அதன் பின்னரே பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் சற்று சீரானது. மேலும் காலில் ஏற்பட்ட காயத்தைச் சரி செய்ய அவரது தொடையிலிருந்து தோல் மற்றும் சதையின் ஒரு பகுதியை எடுத்து காலில் வைத்துக் கூட ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருந்தது.

அவர் சுமார் 5 வாரங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறவும் வேண்டி இருந்தது. வீட்டிற்கு வந்த பிறகும் மூன்று வாரங்கள் படுத்த படுக்கையாகவே இருந்தார்.

ஓட்கா அதிகம் அருந்தியதால் கால்களை இழந்த கனேடிய பெண்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Canadian Woman Loses Her Legs Drinking Vodka

மேலும், சுமார் ஓராண்டு அவர் வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுக்க வேண்டி இருந்தது. பாதிப்பில் இருந்து அவர் முக்கால்வாசி குணமடைந்துவிட்ட போதிலும் அவரால் இன்னும் பழையபடி நடக்க முடியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னுமே தனது கால் முழுமையாகச் செயல்படுவதைப் போலத் தெரிவதில்லை என்று அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

மது அருந்துவது ஓகே தான் ஆனால் மட்டையாகும் அளவுக்கு மது குடித்துவிட்டு கிடப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.