ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தேசிய சொத்து..

0
340

நாடு வீழ்ச்சியடைந்த போது தனியொரு நபராக சவாலை ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார் என்று  ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும் எனவும் அவர் வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றி கடனற்ற நாடாக இலங்கையை மாற்றுவார் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தி தினத்தை முன்னிட்டு ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,  

ஜனாதிபதி ரணில் தேசிய சொத்து; புகழ்ந்த வஜிர! | President Ranil Is A National Glorious Vajra

ஜனாதிபதியின் பிறந்த தினம் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவமுடைய தினமாக மாறியுள்ளது. இதுவே ஐ.தே.க.விற்கு காணப்படும் பெருமையாகும்.

இந்நிலையில் அவரது பிறந்த தினத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பியுள்ளார்.

அவரது பிறந்த தினத்தில் அனைவரும் எரிபொருள் , எரிவாயு , மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை எந்தவொரு தட்டுப்பாடுமின்றி பெற்று அன்றாட செயற்பாடுகளை அசௌகரியங்கள் இன்றி முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே இனியாவது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.