எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

0
303

நாட்டின் எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான அரசியல் நிலைப்பாட்டை விடுத்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீர்பாசனம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளது என்று தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

நிலையான பொருளாதார கொள்கையை பின்பற்றுவதை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் உறுதிப்படுத்தவில்ல

காலத்திற்கு காலம் பொருளாதார கொள்கைகள் மாற்றியமைக்கப்படுவதால் ஒரு சிறந்த இலக்கை நோக்கிச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஆகவே நிலையான பொருளாதார மேம்பாட்டுக்கு நிலையான பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

காலம் காலமாக செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைத்திட்டங்கள் சிறந்ததாக காணப்படுகிறது. ஆகவே எதிர்க்கட்சிகள் பாரம்பரியமான நிலைப்பாட்டில் இருந்து விலகி நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.