ராணி எலிசபெத் கௌரவித்த முதல் திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்!

0
212

நியுசிலாந்தின் முதலாவது திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்காக அயராவது குரல் கொடுத்தவருமான ஜியோர்ஜினா பேயர் (Georgina Beyer) காலமானார்.

சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையிலேயே ஜியோர்ஜினா பேயர் (Georgina Beyer) தனது 65 வயதில் மரணமடைந்துள்ளார்.

எலிசபெத் மகாராணி கௌரவிப்பு

முன்னர் பாலியல் தொழிலாளராக நடிகராக பணியாற்றிய ஜியோர்ஜினா பேயர் (Georgina Beyer) பல வருடங்கள் மேயராக பணியாற்றிய பின்னர் 1999 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2007 வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

எல்ஜிபிடிகியு சமூகத்திற்கான சேவைக்காக 2020இல் எலிசபெத் மகாராணி இவரை கௌரவித்திருந்தார்.

எலிசபெத் மகாராணி கௌரவித்த முதல் திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்! | First Transgender Member Of Parliament Death

ஒருபால் திருமணம் மற்றும் விபச்சாரத்தை குற்றமற்றதாக்குவது போன்றவற்றிற்கு தனது 65 வயதில் நியுசிலாந்தில் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது 2003 பாலியல் தொழில் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் பாலியல் தொழிலாளர்களிற்கான இந்த சட்டமூலத்தை நான் ஆதரிக்கின்றேன். எந்த சூழ்நிலையில் அவர்கள் இந்த தொழிலுக்கு வந்திருந்தாலும் அவர்கள் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க அனுமதிக்காத இந்த சமூகத்தின் பாசங்குதனம் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையால் 20 வயதிற்குள் உயிரிழந்தவர்களை எனக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.