போலந்துக்கான எண்ணெய் விநியோத்தை நிறுத்திய ரஷ்யா

0
270

ரஷ்யா Druzhba குழாய் மூலம் போலந்திற்கு எண்ணெய் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளதாக போலந்து எரிசக்தி குழுவான PKN Orlen தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் எண்ணெய் தேவைகளில் 10 வீதம் பாதிக்கப்படுவதாக குறித்த குழு கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.கே. குழுவின் தலைமை நிர்வாகி ஒபாஜ்டெக் நாங்கள் திறம்பட பொருட்களை பார்த்து வருகிறோம்.

போலந்திற்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய ரஷ்யா! | Russia Stopped Supplying Oil To Poland

அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அதன் வாடிக்கையாளர்களை பாதிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மனி, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் ட்ருஷ்பா பைப்லைன், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த கடுமையான தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.