60,000 அடி உயரத்தில் பறந்த சீன உளவு பலூனை செல்ஃபி எடுத்த விமானி!

0
185

அமெரிக்காவின் வான் பரப்பில் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட சீன உளவு பலூன் ‘செல்பி’ படத்தினை அந்நாடு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டு அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக 60 ஆயிரம் அடி உயரத்தில் அதைக் கண்காணித்த ‘எப்-2 ராப்டர்’ போர் விமானத்தின் விமானி எடுத்த ‘செல்பி’ படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த சீன உளவு பலூனை செல்பி எடுத்த விமானி! | Pilot Took Selfie Chinese Spy Balloon 60 000 Feet

அந்தப் படம் சீன உளவு பலூனின் மர்மமான வெள்ளை கோளத்தில் பேனல்கள் தொங்குவதைக் காட்டுகிறது.

பலூனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்த அமெரிக்க விமானத்தின் நிழலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியையும் அது வெளிப்படுத்தியது.

60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த சீன உளவு பலூனை செல்பி எடுத்த விமானி! | Pilot Took Selfie Chinese Spy Balloon 60 000 Feet

இந்த ‘செல்பி’ படம், அமெரிக்க கண்டத்துக்கு மேலே உள்ள வான்வெளியில் அதிக உயரத்தில் பலூன் நுழைந்தபோதே விமானப்படை வீரரால் எடுக்கப்பட்டது என்று CNN தெரிவித்துள்ளது.

60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த சீன உளவு பலூனை செல்பி எடுத்த விமானி! | Pilot Took Selfie Chinese Spy Balloon 60 000 Feet