என் சமூகத்தை அவதூறு செய்தார்; யாழ் பெண் கொலையில் சந்தேகநபர் வாக்குமூலம்!

0
238

யாழ்.அத்தியடி பகுதியில் 55 வயதான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனது சமூகத்தை இழிவாக பேசினார்; யாழ் பெண் கொலையில் சந்தேக நபர் வாக்குமூலம்! | Suspect Confesses In Jaffa Murder

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்.மாநகர் – அத்தியடி பகுதியில் 55 வயதுடைய தாய் கடந்த 11ம் திகதி இரவு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கணவனை பிரிந்து வாழும் குறித்த பெண் மகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்ட காலமாக தினமும் வருவது வழமை. சம்பவம் இடம்பெற்ற அன்றும் வழமைபோல வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேளை குடும்பப்பெண்ணுடன் வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது.

எனது சமூகத்தை இழிவாக பேசினார்; யாழ் பெண் கொலையில் சந்தேக நபர் வாக்குமூலம்! | Suspect Confesses In Jaffa Murder

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மகள் வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார் என்று பொலிஸாரின் விசாரணையில் கூறியிருந்தார்.

 சந்தேக நபர் கைது

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கொலை சந்தேகநபர் நாவற்குழியில் பதுங்கி இருப்பதாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன்.

எனது சமூகத்தை இழிவாக பேசினார்; யாழ் பெண் கொலையில் சந்தேக நபர் வாக்குமூலம்! | Suspect Confesses In Jaffa Murder

அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை செய்தேன். அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன். தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை வரும் என நான் கூறியபோது அவர் என்னை சமுக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார்.

அதனால் ஆத்திரமடைந்து அவரை கட்டையால் தாக்கிவிட்டேன் என சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்தி:

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2023/02/14/murder/