ஒரே நாளில் 61 ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

0
224

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு (2022) பெப்ரவரி மாதத்தில் இருந்து போரை தொடுத்து வருகின்றது. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன.

மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்ய துருப்புக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது.

ஒரே நாளில் ரஷ்யாவின் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Shot Down 61 Russian Missiles

ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி தாக்குதல் நடத்திய ரஷ்யா பின்னர் குடியிருப்புகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என முன்னேறி தீவிரமான தாக்குதல்களை நடத்துகிறது.

ஒரே நாளில் ரஷ்யாவின் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Shot Down 61 Russian Missiles

இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் ரஷ்யா நேற்றைய தினம் (10-02-2023) சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஒரே நாளில் ரஷ்யாவின் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Shot Down 61 Russian Missiles

ரஷ்யா தரப்பில் மொத்தம் 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்புபடை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) தெரிவித்தார்.

ஒரே நாளில் ரஷ்யாவின் 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Shot Down 61 Russian Missiles

ரஷ்யாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது.

உக்ரைனின் எரிசக்தி அமைப்பை அழித்து உக்ரைன் மக்களுக்கு மின்சாரம், லைட், தண்ணீர் சப்ளை கிடைக்காமல் செய்வதற்காக மற்றொரு முயற்சி இது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.