நடிகர் விஜய்யின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த ஜனனி!

0
119

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிமுடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. பிக்பாஸ் சீசன் 6யில் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக வலம் வந்தவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

பிக்பாஸ் வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையாக ஆரம்பத்தில் இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி உலக வாழ் தமிழ் சொந்தங்களாலும் சரி நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது.

இவ்வாறான நிலையில், எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்ததுடன் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இவர் பயணிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜனனிக்கு படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் 67  படத்தில் ஜனனிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

இந்நிலையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனனி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் வந்த ஜிமிக்கி பாடலுக்கு கறுப்பு சாரியில் ஏற்ப அசைந்தபடி ஜனனி இருக்கின்றார்.

குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.