கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி…

0
431
Canadian flag moved by the wind

கனடாவில் வேலை செய்யும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கூடுதலாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

குடும்பத்தினருக்கும் பணி அனுமதி

அதாவது கனடாவில் தற்காலிகப் பணியாளர் அனுமதி பெற்று வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரும், சில தற்காலிக நிபந்தனைகளின்பேரில் பணி அனுமதி பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள். 

புதிய விதிகளின்படி, training, education, experience and responsibilities (TEER) என்னும் தகுதிபெற்ற பணியாளரின் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் பணி அனுமதி வழங்கப்படும்.

பிள்ளைகள், 16 வயதும் அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருப்பது அவசியம்.

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... | Canada Now Their Family Can Get Work Permits

எப்போதிலிருந்து இந்த விதிகள் அமுலுக்கு வருகின்றன?

இந்த புதிய விதிகள், நேற்று, அதாவது, ஜனவரி 30 முதல் அமுலுக்கு வந்துள்ளன.

விடயம் என்னவென்றால், கனடாவில் பல்வேறு துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் பணி அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விடயத்தை கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.