பிரித்தானிய இளவரசர் ஹரி மதுபோதையில் சென்ட்ரி பெட்டிக்குள் விழுந்த சம்பவத்தை ராணுவ வீரர் நினைவு கூர்ந்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்
2012ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நினைவுகூர்ந்தார். காவலர் பிரிவின் இல்லமான வெலிங்டன் பராக்ஸில் உள்ள இரவு உணவு மேசையில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் விவரித்தார்.
அப்போது ராணுவத்தில் இருந்த ஹரி, தன் கடமையில் இருந்து விலகி தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறித்த ராணுவ வீரரின் வார்த்தைகளின்படி, ஹரி செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் மதுபோதையில் சென்ட்ரி பெட்டிக்குள் தடுமாறி விழுந்து, தற்செயலாக அபாய ஒலி எழுப்பும் அலாரத்தின் தூண்டியுள்ளார்.
இளவரசரை மீட்ட காவலர்கள்
உடனே காவலர் பிரிவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் விரைந்து வந்து இளவரசை மீட்டு, அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல உதவினர். ஆனால் அந்த சமயம் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் ஹரி கடுமையாக நடந்துகொண்டதாக குறித்த ராணுவ வீரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அடுத்த நாள், காவலர் அறைக்கு ஒரு கட்டளை அதிகாரி அழைப்பு விடுத்ததாக எங்கள் வட்டாரம் தெரிவித்தது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ராணுவ சேவையில் இருந்த அந்த மூத்த வீரர், ஹரி தனது நினைவு குறிப்பான Spare-யில் கூறிய கூற்றுக்களால் கோபமடைந்த பின்னர் இவற்றை தெரிவித்தார்.