கனடாவில் 4 வயது சிறுவனின் ஆசை; நிறைவேற்றிய பல்பொருள் அங்காடி நிர்வாகம்

0
146

கனடாவில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிறந்த சிறுவனின் ஆசையை பல்பொருள் அங்காடி நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது.

ஒன்றாரியோவின் பிட்கோன் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடித் தொகுதியின் நிர்வாகம் இந்த நெகிழ்ச்சி செயலை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆசை; நிறைவேற்றிய பல்பொருள் அங்காடி நிர்வாகம் | Wish Granted Ontario Boy Celebrates Birthday

கோவிட் பெருந்தொற்று காரணமாக தனது சிறிய வீட்டிலேயே மூன்று பிறந்தநாட்களை கொண்டாடிய சிறுவன், பல்பொருள் அங்காடியில் 4ம் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென பெற்றோரிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளான்.

எனினும் சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் பல்பொருள் அங்காடியில் இவ்வாறு பிறந்த நாள் கொண்டாட்டங்களைச் செய்ய அனுமதிக்கப்படாது என சிறுவனின் பெற்றோர் இந்த கோரிக்கையை கவனத்திற்கொள்ளவில்லை.

எனினும், சிறுவனின் தாயாரின் சகோதரி பல்பொருள் அங்காடி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி லெவ் கோல்ட்பார்ப் என்ற சிறுவன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுவனின் கோரிக்கைக்கு அமைய மெட்ரோ பல்பொருள் அங்காடித் தொகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.