யாழ் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் ஒருவர் குளிக்கும் காணொளி தகாத முகநூல் பக்கமொன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அறிந்து குறித்த குடும்பப் பெண் மற்றும் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிசார் மற்றும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கனடா குடும்பஸ்தர் மீது சந்தேகம்
இந்நிலையில் அக்காணொளி தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன் அயல் வீட்டுக்கு வந்திருந்த கனடா பிரஜா உரிமை கொண்ட குடும்பஸ்தர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வீட்டில் குடும்பஸ்தரின் பெற்றோர் வசித்துவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் தாய், தந்தையிடம் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அந்த வீடியோ எடுத்தது யார் என்று புலனாய்வு விசாரணைகள் மேற்கொண்ட போது, காணொளி எடுக்கப்பட்ட நேரத்தில் ஆசிரியையின் வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் பழுதடைந்ததால் சில நாட்கள் வெளியே கிணற்றில் குளித்ததாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அந்த காணொளி எடுக்கப்பட்ட கோணத்தில் உள்ள வீட்டில் கனடாவில் இருந்து வந்த குடும்பஸ்தர் வந்து தங்கியிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் 10 வீட்டிற்கு ஒரு கிணறு இருந்த காலத்தில்கூட இப்படியான சம்பவங்கள் யாழில் நடந்ததில்லை. ஆனால் தற்போது வீட்டுக்கு ஒரு கிணறு இருந்தபோதும், சிலரின் வெட்கக்கேடான செயல்களால் , நம் சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.