இலங்கையில் மீட்டர் வட்டி விவகாரம்: யாழில் மேலும் ஒருவர் கைது!

0
147

யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம் (26-01-2023) மீற்றர் வட்டிக்கு பணத்தினை வாங்கியவர்களிடமிருந்து மீள்பெற கடுமையாக தாக்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தாக்குதலை மேற்கொள்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்றையதினம் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பரபரப்படையும் மீற்றர் வட்டி விவகாரம்: யாழில் மேலுமொரு நபர் கைது! | Meter Interest Issue Person Another Arrest Jaffna

சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.