பிரித்தானியாவில் பெற்றோரை 282 முறை கத்தியால் குத்தி கொன்ற மகன்!

0
98

பிரித்தானியாவில் மகன் ஒருவரின் காதில் கேட்ட மர்ம குரலினால் அவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார்ஷியர் என்ற பகுதியில் 37 வயதுடைய டேவிட் என்ற நபர் தன் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

இருப்பினும் மீண்டும் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தன் வீட்டில் தாயை உடலில் கத்தியால் 90 இடங்களில் குத்தியும் தந்தையை 180 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

37 வயதான அவர் தனது பெற்றோரைக் கொல்ல மூன்று கத்திகளைப் பயன்படுத்தினார் என தெரியவந்துள்ளது. பின்னர் அவரே பொலிஸாருக்கு அழைப்பை எடுத்து அவர்கள் வரும் வரை வீட்டு வாசலில் காத்திருந்தார்.

தனது பெற்றோரை காப்பாற்றுமாறு யாரோ காதில் கூறியதாகவும் அதனால் தான் அவர்களை கொலை செய்து காப்பாற்றியதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் வந்ததும் டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.