கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகரின் இல்ல திருமண விழாவில் மஹிந்த ராஜபக்ஷ

0
52

பிரபல தொழிலதிபர் ராஜு ராதா மற்றும் ஆரோன் தவராஜா ஆகியோரின் மகள் அஷ்வினி ராதாவின் திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் பல அரசியல் பிரமுகர்கள் அங்கு ஒன்றுக் கூடியுள்ளனர்.

திருமண விழாவில், மஹிந்த ராஜபக்ச, பௌசி, ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர் ராஜு ராதா நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் பிரபல தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் மஹிந்த ராஜபக்ஷ (Photos) | Mahinda At A Businessman Wedding Ceremony Colombo