மின் தடை காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை; யாழில் சம்பவம்

0
44

மாணவி ஒருவரின் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன மின் தடை காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது

இம் மாணவி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தது தெரிய வந்தது.

சம்பவம்

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவு மாணவி ஒருவர் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டபோது கை விளக்கு ஒன்றை தயார் செய்து தனது கற்கையை தொடர முற்பட்டுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியின் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை தீயில் எரிந்து நாசம் | Appear For The Exam Were Destroyed In The Fire

இதன்போது விளக்கு தவறி வீழ்ந்து மேசையின் அருகே இன்றைய பரீட்சைக்கு தயார் நிலையில் இருந்த அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன தீயில் அகப்பட்டுள்ளது.

இதனால் மாணவி மனம் உடைந்தபோதும் பெற்றோர் உடனடியாக பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இரவோடு இரவாக அதிபர் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாற்று அனுமதி அட்டை, அடையாள அட்டை என்பன உடன் தயாரிக்கப்பட்டு குறித்த மாணவி பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.