விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை இணைத்து கொடுமை செய்தார்கள்..!

0
58

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகளுக்கு தடை விதித்த கனடா, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டிப்பதாக மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டதாகவும், அனைத்து இனங்களையும் சேர்ந்த பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொன்றதாகவும், இலங்கை இந்த கொடுமைகளை 3 தசாப்தங்களாக சகித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.