அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்கும் இந்திய  வம்சாவளி!

0
447

ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் பதவியேற்கவுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிப்படையான ஓரினச் சேர்க்கையாளரான லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் தலைவர்களில் வரத்கர் ஒருவர். ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் அயர்லாந்தின் 2015 வாக்கெடுப்புக்கு முன்பு வரத்கர் ஓரின சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர்.

அவர் ஒரு கலப்பு இனத்தவர் என தெரியவந்துள்ளது. தற்போது பிரதியமைச்சராக உள்ள அவர் எதிர்வரும் சனிக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லியோ வரத்கர் ஏற்கெனவே ஒருமுறை அயர்லாந்தின் பிரதமராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்தார். 43 வயதான லியோ வரத்கர் மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார்.

அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். லியோ வரத்கரின் தாய் மிரியம் வரத்கர் அயர்லாந்தில் பிறந்தவர்.