இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் 5 ஆண்டுகளில் 35 493 பெண்கள் உயிரிழப்பு!

0
382

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் 5 ஆண்டுகளில் 35 493 பெண்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

வரதட்சணைக் கொடுமையால் 5 ஆண்டுகளில் 35 493 பெண்கள் உயிரிழப்பு; வெளியான பகீர் தகவல்! | 35 493 Women Lost Lives In 5 Years Due Dowry

அதிகபட்சமான மரணங்கள்

இதில் அதிகபட்சமான மரணங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, பீகாரில் 5,354 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 2,859 மரணங்களும் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழ்ந்துள்ளன. அத்துடன் மேற்கு வங்கத்தில் 2,389, ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

வரதட்சணைக் கொடுமையால் 5 ஆண்டுகளில் 35 493 பெண்கள் உயிரிழப்பு; வெளியான பகீர் தகவல்! | 35 493 Women Lost Lives In 5 Years Due Dowry

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் 198, கேரளா 52, கர்நாடகா 934 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன .

அதேவேளை இந்தியாவில் சராசரியாக நாள்தோறும் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகின்றன என என அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.