பந்தை கேட்ச் பிடித்து பற்களை இழந்த வீரர்; ரசிகர்கள் அதிர்ச்சி (வீடியோ)

0
219

இலங்கை வீரர் பந்தை கேட்ச் பிடித்த போது 4 பற்கள் உடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 பற்களை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி பால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது.

இப்போட்டியில், இலங்கை வீரரான சமிக கருணாரத்ன தன்னை நோக்கி வந்த பந்தை கேட்சை பிடிக்க முற்பட்டார். அப்போது பந்து எதிர்பாராத விதமாக அவரது பற்களை பதம் பார்த்தது. ஆனாலும், அந்த பந்து அவரது கைகளில் விழுந்தது. கேட்ச் பிடித்த சந்தோஷத்தில் சக வீரர்கள் சமிக கருணாரத்ன கட்டித்தழுவ ஓடி வந்தனர்.

அப்போது, சமிக கருணாரத்ன வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மைதானத்திலேயே வாயில் ரத்தத்தோடு கானப்பட்ட அவர், தன் 4 பற்களை இழந்தார்.

வாயை மூடிக்கொண்டே அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். தற்போது அவர் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.