நாடாளுமன்றில் அமளிதுமளி..! சமிந்த விஜேசிறியை வெளியே அனுப்பிய சபாநாயகர் (video)

0
75

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து நாடாளுமன்ற உறப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமாகியிருந்தது. இதன்போது 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறு வருகிறது.

இந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி இடம்பெற்ற வாதவிவாதங்களை தொடர்ந்தே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லை

இதன்போது உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லையெனவும், என்ற போதும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் நிமால் லான்சா தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக சமிந்த விஜேசிறி மீது உறுப்பினர்கள் சிலர் தெரிவித்ததை அடுத்தே அவரை நாடாளுமன்றில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார்.

மேலும், இன்று அமர்வுகளில் நாடாளுமன்ற உறப்பினர் சமிந்த விஜேசிறியை கலந்து கொள்ள அனுமதிக்கப் போவதில்லை எனவும் சபாநாயகர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

video source from JVP