தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை!

0
315

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது.

கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதின்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

150,000 அவஸ்திரேலிய டொலர் பிணை

அதன்படி 150,000 அவஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது. அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்துடன் தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவத்றகும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை! | Dhanushka Banned From Leaving Australia

தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது முயற்சி

கைதான தனுஸ்கவுக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்த நிலையில், தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற , நடமாட தனுஷ்கவுக்குத் தடை! | Dhanushka Banned From Leaving Australia

இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.