தேசிய கீதத்தை சத்தமாக பாடத காரணத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்ட மாணவன்!

0
166

பாடசாலை மாணவன் ஒருவன் தேசிய கீதத்தை சத்தமாக பாடத காரணத்தினால் அவன் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளான் என கூறப்படுகின்றது.

இச் சம்பவம் அவிசாவளை ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இடம் பெற்றுள்ளது.

முறைப்பாடு

பாடசாலையில் தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில் சத்தமாக பாடுமாறு தெரிவித்து ஆசிரியர் ஒருவர் தலைப் பகுதியில் தாக்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

தேசிய கீதத்தை சத்தமாக பாடாததனால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் | Schoolboy Attacked For Singing The National Anthem

இதனை மாணவரின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்க்கு அமைய ஆசிரியர் தற்போது பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.