சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள்..

0
342

பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல முற்பட்ட லொறியை நிறுத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பியோட்டம் என ஆரம்பகட்ட விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்தி மீன் லொறியொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று காலை மாம்புரி பகுதியில் வைத்து குறித்த லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு, சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்திச் செல்வதாக நுரைச்சோலைப் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த லொறியைப் பின்தொடர்ந்து சென்றவேளை லொறியை நிறுத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது, ரெஜிபோர்ம் பெட்டியினுல் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 774 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த, நிலையில், பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த, பீடி இலைகளின் பெருமதி 46 இலட்சமென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடிய சந்தேக நபர்கள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.