என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பிரதமர் ரிஷி சுனக் உறுதி

0
313

இந்த பொறுப்பில் இருந்துகொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) உறுதியளித்தார்.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக்(Rishi Sunak) முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.

அரசர் மூன்றாம் சார்லஸ்(King Charles) முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை (Rishi Sunak) நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு(Rishi Sunak) நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபவளியை கொண்டாடிய புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டதுடன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கக்கூடிய பிரிட்டனை உருவாக்க, இந்த பொறுப்பில் இருந்துகொண்டு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று உறுதியளித்தார்.