விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை!

0
804

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், அணியின் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா புதிய லேண்ட் ரோவர் எவோக் காரை வாங்கியுள்ளார்.

சினிமா பிரபலங்களையும் சொகுசு கார்களையும் பிரிக்க முடியாது. ஏற்கனவே லக்சரி கார்களை வைத்திருந்தாலும், சினிமா நட்சத்திரங்கள் புதியது புதியதாக வேறொரு சொகுசு கார்களையும் வாங்குவதை அவ்வப்போது பார்த்திருக்கிறோம்.

சினிமா நட்சத்திரங்களை போன்றுதான், கிரிக்கெட் ஸ்டார்களும் சந்தைக்குவரும் புதிய லக்சரி கார்களை கவனித்து கொண்டே இருந்து, உடனடியாக வாங்கிவிடுகின்றனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாங்கிய விலை உயர்ந்த சொகுசு கார்! | Famous Indian Woman Cricketer Buy Range Rover Car

இந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வாங்கியுள்ளார்.

அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே மாருதி சுஸுகி டிசைர், ஹூண்டாய் க்ரெட்டா கார்களை வைத்திருக்கும் ஸ்மிருதி மந்தனாவின் புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.72.09 லட்சமாக உள்ளது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாங்கிய விலை உயர்ந்த சொகுசு கார்! | Famous Indian Woman Cricketer Buy Range Rover Car

ஸ்மிருதி மந்தனாவின் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் சிலிக்கான் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

2020இல் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் எவோக் கார் தற்போதைக்கு ஆர்-டைனாமிக் எஸ்.இ என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாங்கிய விலை உயர்ந்த சொகுசு கார்! | Famous Indian Woman Cricketer Buy Range Rover Car

இந்த ஆற்றல்மிக்க எஸ்யூவி காரை மைல்ட்-ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடன் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வில் வாங்கலாம்.

இந்தியாவில் எவோக்கின் 2ஆம் தலைமுறை வெர்சன் 2020இல் தான் அறிமுகமானது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அந்த மாடலை தான் ஸ்மிருதி மந்தனாவும் வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீராங்கனை சுமிருதி மந்தனாவின் முதல் லக்சரி கார் இதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாங்கிய விலை உயர்ந்த சொகுசு கார்! | Famous Indian Woman Cricketer Buy Range Rover Car

ஏனெனில் இதனை வாங்குவதற்கு முன்பு வரையில் மாருதி சுஸுகி டிசைர் & ஹூண்டாய் க்ரெட்டா என பட்ஜெட் விலை கார்களையே இவர் கொண்டிருந்தார்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக விளங்கும் சுமிருதி மந்தனா கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் தான் 3,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாங்கிய விலை உயர்ந்த சொகுசு கார்! | Famous Indian Woman Cricketer Buy Range Rover Car

இத்தகைய மைல்கல்லை எட்டிய 3வது இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார். இவருக்கு முன்னால் மிதாலி ராஜ் மற்றும் கேப்டன் ஹர்மந்த்ப்ரீத் கவுர் எட்டியிருந்தனர்.

இத்தகைய முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக விளங்கும் ஸ்மிருதி மந்தனா தனது முதல் லக்சரி காரையே இப்போதே தான் வாங்கியுள்ளார் என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.