ஜிபி முத்துவுக்கு பதிலாக களமிறங்கும் புதிய போட்டியாளர்; வெளியாகிய தகவல்!

0
443

பிக்பாஸ் போட்டியில் ஜிபி முத்து வெளியேறிய நிலையில், புதிய போட்டியாளரை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிபி முத்து

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே சென்றார் ஜிபி முத்து. முதல் வாரம் முழுக்க மிகவும் கலகலப்பாக இருந்த ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் இருந்து, தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளின் நியாபகம் வந்ததால்

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என, பலமுறை பிக்பாஸ்ஸிடம் கோரிக்கை வைத்து வந்தார். பிக்பாஸ் சில முறை ஜிபி முத்துவை அழைத்து, அவரது பிள்ளைகளிடம் பேசியதாகவும்., அவர்கள் உங்களை 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்து சமாதானம் செய்ய முயற்சித்தார்.

 மன்சூர் அலிகான்

பின்னர் முடிவு உங்கள் கையில் உள்ளது என கூறி அனுப்பினார். ஆனால் ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜிபி முத்துவுக்கு பதிலாக களமிறங்கும் கலக்கல் போட்டியாளர் - யார் தெரியுமா.. | Biggboss Tamil 6 Gp Muthu Elimination

இந்நிலையில், முதல் போட்டியாளராக உள்ளே சென்ற ஜிபி முத்து தற்போது முதல் போட்டியாளராக வெளியே வந்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு பதிலாக மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.