மூன்றாம் வகுப்பு மாணவியின் மூன்று உலக சாதனை!

0
585

பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில் சாதனை படைத்து மூன்று உலக சாதனை புத்தக்கங்களில் மூன்றாம் வகுப்பு மாணவி இடம்பிடித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த பிரபு – வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ (வயது 7).

அதே கிராமத்தில் உள்ள பாடசாலையில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில், மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் ஹேமஸ்ரீ, பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில், ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை, ‛வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகயோரை, நாகராஜகண்டிகை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.