7 மாத குழந்தையை கடித்துக்குதறிய தெரு நாய்!

0
494

7 மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா லக்னோ, உத்தரபிரதேசம் – டெல்லியில் அமைந்துள்ள ஒரு நகரம்.

அந்நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர்.

7 மாத குழந்தையை கடித்துக்குதறிய தெரு நாய்! | The Street Dog That Bit The 7 Month Old Child

கட்டிட வேலைக்கு சென்ற பெற்றோர் 

தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்துவந்தனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், விரைந்து சென்று பார்த்தபோது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

7 மாத குழந்தையை கடித்துக்குதறிய தெரு நாய்! | The Street Dog That Bit The 7 Month Old Child

தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.