குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்யுங்கள்; கனேடியர்களிடம் வேண்டுகோள்

0
311

ரொறன்ரோவில் குடியிருக்கும் வங்கதேச தம்பதி ஒன்று தங்களது பிஞ்சு குழந்தையை காப்பாற்ற உறுப்பு தானம் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிறந்து 6 மாதமேயான குழந்தை அலிசாவுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு இது பொதுவானது தான் என கூறி வந்த மருத்துவர்கள், திடீரென்று ஒருநாள் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்திடம், குழந்தை அலிசாவுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரதிர்ச்சியை அளித்துள்ளனர். 2017ல் இருந்தே கனடாவில் குடியிருந்து வரும் Moniruzzaman Moni குடும்பம், அரசு உதவி ஏதும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

தற்போது மகளின் இந்த நிலையில் உடைந்துபோயுள்ள குடும்பம், கல்லீரல் தானம் பெற போராடி வருகின்றனர். 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் கல்லீரல் தானம் பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, தங்களால் தங்கள் பிள்ளைக்கு கல்லீரல் தானம் தர முடியாத சிக்கலும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.