ராஜபக்ச குடும்பத்தினருக்கும் திலினி பியுமாலிக்கும் தொடர்பு உள்ளதா?

0
335

பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியுடன் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்யவுள்ளதாக தயாசிரி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

திலினி பியுமாலியுடன் இவர்களுக்கும் தொடர்பா? | Are They Also Related To Thilini Biumali

எவ்வித தொடர்பும் இல்லை

இதேவேளை, திலினி பியுமாலிவுடன் தொடர்பிலிருப்பதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

திலினி பியுமாலியுடன் இவர்களுக்கும் தொடர்பா? | Are They Also Related To Thilini Biumali

இவ்வாறான நிலையில் ஓமல்பே சோபித்த தேரருக்கும் திலினி பியுமாலியுடன் தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என செய்தியாளர் சந்திப்பில் தேரர் தெரிவித்தார்.

பல வர்த்தகர்களை ஏமாற்றி நிதி மோசடி

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்றினை நடத்திய திலினி பியுமாலி பல வர்த்தகர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலினி பியுமாலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த செய்தியும் அதனுடன் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களும் ஆதாரமற்றவை என்று ராஜபக்ச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

திலினி பியுமாலியுடன் இவர்களுக்கும் தொடர்பா? | Are They Also Related To Thilini Biumali

ஷிரந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளில் பியுமாலியும் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்ச அலுவலகம் அந்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே ஷிரந்தி ராஜபக்ஷ நிகழ்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 226 மில்லியன் ரூபா, 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பியுமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.